உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற முயன்றவர் கைது

கஞ்சா விற்ற முயன்றவர் கைது

புதுச்சேரி: உழவர்கரையில் கஞ்சா விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் உழவர்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரியம்மன்கோவில் சந்திப்பு அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், சண்முகாபுரம் சேகர் மகன், பிரபு என்கின்ற அப்பு,30; என்பதும் அவர் அப்பகுதியில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்ய 80 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் , 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  இவர்  மீது, விசாகபட்டிணம் மற்றும் திருவண்ணாமலையில் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை