உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருக்கனுார் : திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தினத்தை யொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.காசநோய் துணை செவிலியர் பொற்கிலை வரவேற்றார். பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி, காசநோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்கு குறித்து பேசினார்.டாக்டர்கள் சுஸ்மித்தா, சவுந்தரபாண்டியன் ஆகியோர் காசநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து பேசினர்.ஏற்பாடுகளை கிராம செவிலியர்கள் ஹோமலதா, பனி மலர், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர்.சுகாதார உதவியாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார். தொடர்ந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பெட்டகம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி