மேலும் செய்திகள்
காசநோய் பரிசோதனை முகாம்
16-Apr-2026
புதுச்சேரி: கொடாத்துார் துணை சுகாதார நிலையத்தில் காசநோய்க்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் (மே12) நடந்தது. புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மூலம் 'இல்லம் தேடி எக்ஸ்ரே, சுகமான சுவாசம், வளமான வாழ்வுக்கு வழி' என்ற நோக்கில் 100 நாள் காசநோய்க்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொடாத்துார் துணை சுகாதார நிலையத்தில், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் (மே12) நடந்தது. முகாமிற்கு, டாக்டர் துரைமுருகன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களுக்கு மார்பக எக்ஸ்ரே, சளி, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உயரம் மற்றும் எடை, ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் அய்யனார், பொற்கிலை, மகப்பேறு உதவியாளர் ஹேமாவதி, ஆஷா பணியாள ஜெயபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
16-Apr-2026