தெரு மின் விளக்குகள் எம்.எல்.ஏ., இயக்கிவைப்பு
பாகூர்: பாகூர் – கன்னியக்கோவில் சாலையில், ரூ. 18. 90 லட்சம் செலவில், அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பயன்பாட்டிற்கு அர்பணித்தார். பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவில் முதல் பாகூர் துாக்கு பாலம் வரையிலான சாலை பகுதி, தெரு மின் விளக்குகள் இல்லாமல், இரவு நேரங்களில் இருண்டு கிடந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். . இதையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக, 18. 90 லட்சம் ரூபாய் செலவில், கன்னியக்கோவில் – பாகூர் துாக்குபாலம் இடையிலான சாலை பகுதியில் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, தெரு மின் விளக்குகளை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மின் துறை செயற்பொறியாளர் உமேஷ்சந்திரா, உதவி பொறியாளர் பாரதி, இளநிலை பொறியாளர் திருமுருகன் மற்றும் தி.மு.க.,, தொகுதி பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொணடனர்.