உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கெஸ்ட் ஹவுசில் டி.வி., திருட்டு

கெஸ்ட் ஹவுசில் டி.வி., திருட்டு

புதுச்சேரி : புதுச்சேரியில் சுற்றுலா பயணி பெயரில்கெஸ்ட் ஹவுஸ் அறையில் டி.வி., திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, உருளையன்பேட்டை காவல் நிலையம் அருகில் எஸ் 4 கெஸ்ட் ஹவுஸ் என்ற விடுதி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் எஸ் 4கெஸ்ட் ஹவுசில் அறை எடுத்து தங்கினார்.நேற்று காலை அறையை காலி செய்து கொண்டு புறப்பட்டார். கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு பொருத்தியிருந்த எல்.இ.டி., டிவி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.கெஸ்ட் ஹவுசில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தபோது, தினேஷ் தங்கி இருந்த அறையில் இருந்து எல்.இ.டி. டிவி கழட்டி, படுக்கை பெட்ஷீட் மூலம் சுற்றி, திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.இது தொடர்ந்து கெஸ்ட் ஹவுஸ் நிர்வாகம் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில்சி.சி.டி.வி., ஆதாரத்துடன் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !