உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மீனவரை தாக்கிய இருவருக்கு வலை

 மீனவரை தாக்கிய இருவருக்கு வலை

புதுச்சேரி: மீனவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, இருவரை போலீசார் தேடி வருகின்றனர். குருசுக்குப்பம், மரவாடி தெரு வை சேர்ந்தவர் புஷ்பராஜ், 26; மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிஷோர், 32; வாழக்குளத்தை சேர்ந்த சரத், 33, ஆகியோர் புஷ்பராஜிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த கிேஷார், சரத் இருவரும் புஷ்பராஜியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கிேஷார் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ