மேலும் செய்திகள்
முதியவர் மீது தாக்குதல்
25-Aug-2025
புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர்கோகுல் ராம், 26; அதே பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடினார். இவரது கடைக்கு அருகில் உள்ள பைக் விற்பனை செய்யும் ேஷாரூமில், பணிபுரியும் விஜயபாரத், ராமமூர்த்தி ஆகியோர் இவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். தீப்பெட்டி இல்லை என, கோகுல்ராம் கூறினார். ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து, கோகுல்ராமை தாக்கினர். தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கி, கடை பொருட்களை சேதப்படுத்தினர். கோகுல் ராம் புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
25-Aug-2025