மேலும் செய்திகள்
மத்திய கூட்டுறவு வங்கியில் கருத்தரங்கு
19-Nov-2024
அண்ணா கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்
30-Oct-2024
புதுச்சேரி : புதுச்சேரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் துவங்கியது.தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி ஆங்கில துறை சார்பில், இந்தியமயமாக்கல் ஆங்கில ஆய்வுகள் வடிவமும் கோட்பாடு என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் துவக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி, இருநாள் தேசிய கருத்தரங்கை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில் பிலாஸ்பூர் காசுதாஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலோக் குமார் சக்கரவால், சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஜோதிர்மயதிருபாதி பேசினர். இந்திய இலக்கியங்களில் உள்ள நடை, கரு மேற்கத்திய இலக்கியங்களில் பிரதிபளிப்பு குறித்து கலந்துரையாடி விளக்கம் அளித்தனர். இந்திய பண்பாட்டினை ஆங்கில இலக்கியங்கள் பதிவு செய்துள்ள விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது, இன்று 23ம் தேதி இரண்டாவது நாளாக நடக்கும் கருத்தரங்க அமர்வுகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திர ஜெகநாத் துத்தே, அஞ்சு நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Nov-2024
30-Oct-2024