உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண்களிடம் ரகளை இரண்டு பேர் கைது

 பெண்களிடம் ரகளை இரண்டு பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் பெண்களிடம் ஆபாசமாக பேசி ரகளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்ட நிரவி விழிதியூர் பிரதான சாலை துாத்துப்போனமூலை சாலை சந்திப்பில் நாகை மாவட்டம் ஏனங்குடியைச் சேர்ந்த சேரன், 24; என்பவர் அவ்வழியே சென்ற பெண்களை ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளார். இதனை கண்ட நிரவி போலீசார் சேரனை கைது செய்தனர். இதுப்போல் நிரவி கீழ்மனை பிரதான சாலை, நாகை பைபாஸ் சாலை சந்திப்பில் அம்பல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 46, என்பவர் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி