மேலும் செய்திகள்
ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்
1 hour(s) ago | 10
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
2 hour(s) ago | 1
புதுச்சேரி : நைனார்மண்டபத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.முதலியார்பேட்டை நைனார்மண்டபம், துலுக்காணத்தம்மன் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, பயங்கர சத்துடன் மர்ம பொருள் வெடித்தது. அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது, கோபி வீட்டின் முன் காகிதங்கள் சிதறி கிடந்தது.தகவலறிந்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அதில், தேங்காய்த் திட்டு, வசந்தம் நகர், 6வது குறுக்கு தெரு முனிதாஸ் மகன் முகிலன், 20; நைணார்மண்டபம், சுதானா நகர், கருமாரியம்மன் கோவில் வீதி கண்ணன் மகன் சூர்யா, 20; ஆகிய இருவரும் கோபி வீட்டின் முன் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து, தேங்காய்திட்டில் பதுங்கியிருந்த இருவரையும், கிரைம் போலீசார் ஸ்டீபன், கலை, ராஜவேலு, ஜெயபிரகாஷ் குழுவினர் கைது செய்தனர்.விசாரணையில், நேற்று முன்தினம் கோபி வீட்டின் வழியே பைக்கில் வேகமாக சென்ற சூர்யா மற்றும் முகிலனை, கோபி தடுத்து நிறுத்தி கண்டித்தார். அந்த ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து, கோபிவீட்டின் முன் வீசியது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
1 hour(s) ago | 10
2 hour(s) ago | 1