மேலும் செய்திகள்
மாணவர்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
16-Oct-2026
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் பல்கலைக்கழக மதில் சுவரில் ஸ்பிரே பெயிண்ட்டிங் மூலம் எழுதிய இரு மாணவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி பல்கலைக்கழக மதில் சுவரில், பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவதூறாக சித்தரிக்கும் வாசங்கள் ஸ்பிரே பெயிண்ட்டிங் மூலம் எழுதப்பட்டிருந்தன. இதனால் ஆவேசமடைந்த ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவதூறாக எழுதப்பட்டிருந்த பகுதிகளைக் கலாய் ஷீட்டுகள் கொண்டு மறைத்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாகச் சென்ற மாணவர் அமைப்பினர், நிர்வாகக் கட்டடத்தில் பதிவாளர் குலசேகரனைச் சந்தித்துப் பேசினர். இதில் தொடர்புடைய மாணவர்களை உடனடியாகக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். விசாரணையில் மூன்று மாணவர்கள் ஸ்பிரே பெயிண்ட்டிங் மூலம் பிரதமரை இழிவாக எழுதியது உறுதி செய்யப்பட்டது.மாணவர்கள் சஸ்பெண்ட்விசாரணையில் மாணவர்கள் எழுதியதை ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து எம்.ஏ. பொருளாதாரத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அக்னி அஷிக், எம்.ஸ்சி. இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஹைசம்ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவத்தின்போது உடன் இருந்த ஒரு மாணவியிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள பல்கலைக்கழக விடுதியை உடனடியாகக் காலி செய்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.–பல்கலைக்கழகத்தில் பதற்றம் பிரதமரைத் தவறாக சித்தரித்து எழுதிய அக்னி அஷிக், எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பின் பல்கலைக்கழகச் செயலாளராக உள்ளார். ஏற்கனவே உமர் காலித் விவகாரம் தொடர்பாக ஏ.பி.வி.பி. மற்றும் எஸ்.எப்.ஐ. அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போதைய இந்தச் சம்பவம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ.பி.வி.பி. கண்டனம்இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் கூறியதாவது: பிரதமரைத் தவறாக சித்தரித்து எழுதியது எஸ்.எப்.ஐ. அமைப்பின் பல்கலைக்கழகச் செயலாளர் அக்னி அஷிக், ஆசிம் மற்றும் ஒரு பெண் என்பது சிசிடிவி மூலம் நிரூபணமாகியுள்ளது. மாணவர்களிடையே பிரிவினைவாத அரசியலைச் செய்து அமைதியைச் சீர்குலைக்க முயலும் எஸ்.எப்.ஐ. அமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். தேசவிரோதியான உமர் காலித் படமும் பல்கலைக்கழக அனுமதியுடன் அரங்கேற்றப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகம் இத்தகைய தேச விரோத செயல்களுக்கு ஊக்கமளிக்கும் இடமாக மாறுவது வேதனைக்குரியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடியை இழிவுப்படுத்தி விவகாரத்தினை தொடர்ந்து பா.ஜ.,வினர் நேற்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தினர். பல்கலை நிர்வாக போக்கினை கண்டித்து கோஷம் எழுப்பினர்
16-Oct-2026