வேளாண் துறையில் இருவார சேவை விழா
புதுச்சேரி: வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் இருவார சேவை துவக்க விழா நடந்தது. இயக்குநர் அலுவலகத்தில் நடந்த விழாவை, துணை இயக்குநர் செழியன் பாபு மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.துணை இயக்குநர் பிரபாகரன், வேளாண், சுற்றுச்சூழல், மரம் நடுதல் மற்றும் வன பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். விழாவில், பொது மக்களுக்கு உண்டான சேவைகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செவ்வனே செய்வோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் விநாயகமூர்த்தி மற்றும் வேளாண் பொறியியல் பணிமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.