மேலும் செய்திகள்
முதியவர் சாவு
28-Jan-2026
புதுச்சேரி: தீ விபத்தில் காயமடைந்த டூ வீலர் மெக்கானிக் சிகிச்சை பலனின்றி இறந்தார். லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வேஸ்வர சோமநாதன், 60; டூ வீலர் மெக்கானிக். இவர், கடந்த 16ம் தேதி பைக் இன்ஜினை பிரித்து பெட்ரோல் பயன்படுத்தி வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது அவரது மனைவி தனலட்சுமி வீட்டில் வத்தி ஏற்றியபோது அதிலிருந்து தீப்பொறி சோமநாதன் மீது விழுந்ததில் அவரது உடல் தீப்பிடித்து எரிந்தது . அவரை அவரது மகன் மற்றும் உறவினர்கள் காப்பாற்றி, ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Jan-2026