உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டச்சு தேர்வு; 2,500 பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வு; 2,500 பேர் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மையங்களில் நடந்த, தட்டச்சு தேர்வில், 2 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தட்டச்சு தேர்வு, இம்மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி மோதிலால், நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, கூட்டுறவு மேலாண்மை நிலையம், மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய 3 இடங்களில் நேற்று தேர்வு நடந்தது. அதில், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வு 3 பேட்சாக, நடந்தது.தொடர்ந்து,தமிழ் மற்றும் ஆங்கிலம், முதுநிலைக்கான தட்டச்சு தேர்வு, 2 பேட்சாக நடந்தது. இந்த தேர்வில், 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, இன்று (31ம் தேதி) தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தட்டச்சு தேர்வு, 4 மற்றும் 5வது பேட்சுகளுக்கும், தொடர்ந்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தட்டச்சு தேர்வு 3வது பேட்சுக்கு தேர்வு நடக்க உள்ளது.மேலும், ப்ரீ ஜூனியர் தட்டச்சு தேர்வும், தொடர்ந்து, ஆங்கிலம் ஸ்பீடு தட்டச்சு தேர்வும், இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி