உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

பாகூர் : இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கலையரங்கத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 2611143 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !