உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே திருக்காஞ்சி மேம்பாலத்தின் கீழே ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக இன்று (நவ.,10) மாலை வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் மூலம் மாலை 6:30 மணியளவில் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமத்திற்கு பிறகே உடலை கரைக்கு கொண்டு சென்றனர். 30 வயது மதிக்கத்தக்க நபர், கத்திரி பூ கலரில் முழுக்கை சட்டை, கருநீல கலர் பேண்ட் அணிந்திருந்தார். மேம்பாலத்தில் இருந்து போதையில் விழுந்தாரா, யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணைில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை