உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் மருத்துவமனையில் அனுமதி

அடையாளம் தெரியாத நபர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் அருகில், நேற்று முன்தினம் மாலை 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் அடிபட்டு மயங்கி கிடந்தார். இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அவசர அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய பெயர் மற்றும் விலாசம் தெரியவில்லை. மேற்கண்ட நபரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதனை 94880-74492 என்ற எண்ணிலும் அல்லது மக்கள் குறைதீர் அதிகாரி ரவியை 93634-5115 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை