வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நைஸ்
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிக்கான முன் ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கும் நுாறு சதவீத நிதியுதவிக்கும் அனுப்பப்பட்டது. அதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.8 கி.மீ., தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு நுாறு சதவீத நிதியுதவியாக ரூ.436.18 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சட்டசபையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன், புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விழா நடைபெறும் இடமான தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடத்தை பார்வையிட்டனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பன்னீர் மற்றும் துறை சார்ந்த அதி காரிகள் உடனிருந்தனர்.
நைஸ்