உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பல்கலை அளவில் டென்னிஸ் போட்டி: கால்நடை மருத்துவ கல்லுாரி சாம்பியன்

 பல்கலை அளவில் டென்னிஸ் போட்டி: கால்நடை மருத்துவ கல்லுாரி சாம்பியன்

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக கல்லுாரிகள் அளவில் மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கல்லுாரிகளை சார்ந்த 12 மாணவியர் அணிகள் கலந்து கொண்டன. கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வர் முருகவேல், முனைவர் அஜய் குமார் போட்டிகளை துவங்கி வைத்தனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி - காரைக்கால் அவ்வையார் கலைக் கல்லுாரி அணிகள் மோதின. அதில், 3:2 என்ற புள்ளி விகிதத்தில் கால்நடை மருத்துவ கல்லுாரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. பல்கலைக்கழகத்தின் முனைவர்கள் பிரகாஷ் சந்து, வசந்தி கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினர். விளையாட்டு துணை இயக்குனர் முகமது அசிம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை