பல்கலை பேராசிரியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
புதுச்சேரி: தொழில் நுட்ப பல்கலைக்கு நிர்வாக குழு அமைக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரசு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு நிர்வாக குழு அமைக்க வேண்டும். ஓய்வூதிய வயது உயர்வை அறிவிக்க வேண்டும். பொறுப்பு பதிவாளர் நியமன முறைகேட்டை விசாரிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலை பேராசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.