உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பேட்மிட்டன் போட்டியில் வென்ற பல்கலை., மாணவருக்கு பாராட்டு

 பேட்மிட்டன் போட்டியில் வென்ற பல்கலை., மாணவருக்கு பாராட்டு

புதுச்சேரி: சர்வதேச அளவில் நடந்த பாரா பேட்மிட்டன் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற பல்கலைக் கழக மாணவரை சபாநாயகர் செல்வம் பாராட்டினார். சர்வதேச அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி, எகிப்து நாட்டின், கெய்ரோவில் நடந்தது. இந்த போட்டியில், 28 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர் வெங்கட சுப்ரமணியன் கலந்து கொண்டு, வெண்கலப் பதக்கம் பெற்றார்.அவருக்கு சபாநாயகர் செல்வம் பாராட்டு தெரிவித்தார். அப்போது மாணவரின் தாய் ஜெயப்பிரா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை