படைப்பாற்றலில் அசத்தும் பல்கலைக்கூட மாணவர்கள்
அரியாங்குப்பத்தில், பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளது. இங்கு, நுண்கலை துறை, ஓவியம். சிற்பம், நடனம், இசை உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.சிற்ப துறையில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் களிமண்ணில், சிலைகளை வடித்து, படைப்பாற்றலில் தங்கள் திறமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வருகின்றனர். சிற்ப துறையில் தகடு, கான்கிரீட், சுதை, உலோகம், கல், மரம், சுடுமண் சிற்படம் வடிப்பதில் பயிற்சி எடுத்து வரும் மாணவர்கள், களி மண்ணை அடிப்படையாக கொண்டு, மனித உருவம், சாமி சிலைகள் உள்ளிட்டவை செய்து வருகின்றனர். இவர்களுக்கு துணை பேராசிரியர் மாமலைவாசகன் பயிற்சி அளித்து, ஊக்கம் அளித்து வருகிறார்.இத்துறையில், படிக்க புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, தமிழக பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். இதனால், பிற துறைகளைவிட சிற்ப துறைக்கு பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.