உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எரியாத ஹைமாஸ் விளக்கு அ.தி.மு.க., நுாதன ஆர்ப்பாட்டம்

எரியாத ஹைமாஸ் விளக்கு அ.தி.மு.க., நுாதன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: முதல்வர் தொகுதியில், ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சி பொருளாக இருப்பதால், அ.தி.மு.க., வினர் மலர் வளையம் வைத்து நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் தொகுதியான தட்டாஞ்சாவடி, பாக்கமுடையான்பட்டில், பல ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளது. இந்த தொகுதியில், சாலை, குடிநீர், கழிவுநீர், வாய்க்கால் வசதிகள் இல்லாமல் உள்ளது. குறைந்த மின் அழுத்தம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாக்கமுடையான்பட்டு துவக்க பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என, எரியாமல் இருக்கும் ஹைமாஸ் விளக்கிற்கு மலர் வளையம் வைத்து அ.தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தட்டாஞ்சாவடி தொகுதி அ.தி.மு.க., செயலாளர் கமல்தாஸ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அன்பு முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ