உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் நாளை முதல் உபன்யாச நிகழ்ச்சி

சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் நாளை முதல் உபன்யாச நிகழ்ச்சி

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மகோற்சவத்தையொட்டி, நாளை (26ம் தேதி) முதல் வரும் 1ம் தேதி வரை, உ.வே. தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகளின், ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நிகழ்வு நடக்கிறது. புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம், மார்கழி மகோற்சவ கமிட்டி மற்றும் சாரதா கலாமந்திர் இசை நாட்டியப்பள்ளி சார்பில், 14ம் ஆண்டு மார்கழி மகோற்சவம், எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாராதம்பாள் ஆலயத்தில், கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் ஜனவரி 14ம் தேதி வரை தினமும் நடைபெறும் உற்சவத்தில், விஷ்னு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், திருப்பாவை விளக்கவுரை, இசை நாட்டியம், நாம சங்கீர்த்தனம் போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாளை (26ம் தேதி) முதல் வரும் 1ம் தேதி வரை, தினமும் மாலை 6.30 மணிக்கு, தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகளின், ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நிகழ்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ