மேலும் செய்திகள்
அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் முறையீடு
09-Dec-2024
பாகூர்: பாகூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட வேண்டும் என, மத்திய குழுவினரிடம், செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.பாகூர் தாலுகாவில் வெள்ளம் பாதித்த பகுதியில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்களிடம், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு முதல், கொம்மந்தான்மேடு வரை தென்பெண்ணையாற்றின் கரைகளை சீரமைத்து, வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும். குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டில் இருந்து வரும் சித்தேரி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்து, வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், விவசாயத்திற்கும், குடியிருப்பு பகுதிக்கும் தனித்தனியாக மின் வழித்தடங்கள் அமைத்திட வேண்டும். வெள்ளத்தால் நெல், கரும்பு, மணிலா, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வேளாண் பயிர்களுக்கு, மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணம் குறைவாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட வேண்டும். வீடுகள், உடமைகளை இழந்தவர்களுக்கு தனியாக இழப்பீடு வழங்கிட வேண்டும் என, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
09-Dec-2024