உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிவேக வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அதிவேக வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாகூர்,: கிருமாம்பாக்கத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று நடந்தது. போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், சந்திரசேகரன், இருதயநாதன் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொது மக்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில், புதுச்சேரி - கடலுார் சாலையில், முக்கிய சந்திப்புகளில் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.அந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளின் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்ஸ்சர் பொறுத்திய வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட புகார்களை தெரிவித்தனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை