உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால்-, பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால்-, பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் : காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவை தொடங்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் பாலகிருஷ்ணன்,செயலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் புதுச்சேரி எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வ கணபதி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு 40ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சரக்கு ரயில் மட்டும் இயக்கப்ப டுகிறது. காரைக்காலில் இருந்து சென்னை செல்லவேண்டுமெனில் நாகப்பட்டினம்,திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்ல வேண்டியுள்ளது. இதற்காக 86 கி.மீ.,துாரத்தை கடக்க வேண்டியுள்ளது. காரைக்கால் பேரளம் பாதையில் பயணித்தால் குறுகிய நேரத்தில் மயிலாடுதுறையை அடைந்து விடமுடியும். எனவே, உடனடியாக இப்பாதையில் பயணிகள் ரயில் சேவையை தொடங் கவேண்டும். மேற்கு ரயில்வே நிர்வாகம், இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள வேளாங்கண்ணி கோவில் திரு விழாவுக்காக பந்த்ரா - வேளாங் கண்ணி மற்றும் பிற சிறப்பு ரயில்கள் காரைக்கால் வழியாக இயக்கப் படும்போது, காரைக்காலில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் காரைக்காலில் இருந்து திருப்பதி, செங்கோட்டை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
ஆக 14, 2025 22:08

வாரம் மூன்று முறை என்று மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காட்பாடி, சித்தூர், பகலா வழியாக திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்கால் வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கவேண்டும். இதன்மூலம் கூடுதலாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், திருப்பதிக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும். மேலும் வடமேற்கு தமிழ்நாட்டில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு என வருகை தரும் மும்மத பக்தர்களும் பலனடைவார்கள். பெருமளவில் வளர்ந்து யாரும் சரக்கு கப்பல் துறைமுக நகரான காரைக்கால் தொழில் நகரமான வேலூர் மாவட்டம் இணைக்கப்படுவதன் மூலம் ஆண்டு முழுக்க 365 நாட்களும் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கொட்டும் பாதையாக அமையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை