உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஊசுடு தொகுதி காங்., வேட்பாளர் தொண்டமாநத்தத்தில் ஓட்டு சேகரிப்பு

 ஊசுடு தொகுதி காங்., வேட்பாளர் தொண்டமாநத்தத்தில் ஓட்டு சேகரிப்பு

வில்லியனுார்: ஊசுடு(தனி) தொகுதி காங்., வேட்பாளர் கார்த்திகேயன் நேற்று தொண்டமாநத்தம் கிராமத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். ஊசுடு (தனி) தொகுதி காங்., வேட்பாளர் கார்த்திகேயன் நேற்று காலை ஊசுடேரி ஐயங்குட்டிபாளையம் தொண்டமாநத்தம் பேட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார். பல கிராமங்களில் மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்து வேட்பாளரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் வி.சி., கட்சி சார்பில் தொகுதியில் வேட்பாளராக உள்ள கட்சியின் முதன்மை செயலாளர் அரிமாதமிழன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, தொண்டமாநத்தம் பேட் பகுதியில் வெற்றி பெற்றதும், இலவச மனைப்பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாகவும் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ