உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலையில் திரியும் கால்நடைகளை ஏலம் விட உழவர்கரை நகராட்சி முடிவு

 சாலையில் திரியும் கால்நடைகளை ஏலம் விட உழவர்கரை நகராட்சி முடிவு

புதுச்சேரி: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலம் விட உழவர்கரை நகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தேசிய மற்றும் மாநில நெடு ஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, அந்த கால்நடைகளை பிடித்து கோசாலை அல்லது கால்நடை பட்டிகளில் அடைக்க வே ண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தும் வகையில், பொதுப்பணிதுறை, தேசிய நெடுஞ்சாலை, போலீஸ், போக்குவரத்து மற்றும் கால்நடைத்துறை ஆகிவற்றுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டம், கடந்த 28ம் தேதி நடந்தது. முதல் கட்டமாக நெடுஞ்சாலைகளில் மாடுகள் காணப்படும் இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரோந்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்த குழுக்கள் அமைத்து, வரும் வாரங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டது. அவ் வாறு பிடிக்கப்படும் மாடுகளை உரிமையாளர்களுக்கு திருப்பித் தராமல், கோசாலைகள், கால்நடைப் பட்டியில் அடைத்து பின், பொது ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, கால் நடைகளை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை தங்களுக்கு சொந்தமான இடங்களிலேயே பாதுகாப்பாக வளர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் நடமாட்டம் குறித்த புகார் அளிக்க 1033 எண்ணையும், மாநில நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகளுக்கு நகராட்சி கட்டுபாட்டு அறையை 75981 71674 வாட்ஸ் ஆப் எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை