வாஜ்பாய் நினைவு நாள்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கடற்கரை சாலை, நகராட்சி கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, அலங்காரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, எம்.எல்.ஏ., ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.