மேலும் செய்திகள்
சிருங்கேரி சுவாமிகள் ஆராதனை விழா
14-Sep-2025
புதுச்சேரி : முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமி மடத்தில், வள்ளலாரின் 203வது வருவிக்கவுற்றப் பெருநாள் விழா (பிறந்த நாள்), ராமலிங்க சுவாமி மடத்தின் 77வது ஆண்டு துவக்க விழா நாளை ( 24ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நாளை காலை 7:00 மணிக்கு திருஅகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, 8:00 மணிக்கு சத்திய ஞானக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜெகநாதன் முன்னிலையில், வக்கீல் ராமமூர்த்தி, சத்திய ஞானக்கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார். பின், காலை 10:00 மணிக்கு திருவருட்பா கருத்தரங்கம் நடக்கிறது. ராமலிங்க சுவாமி மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்கிறார். பேராசிரியர் குழந்தைவேலன் தலைமை தாங்குகிறார். பல்வேறு தலைப்புகளில் வள்ளலார் தொடர்பாக தமிழறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.
14-Sep-2025