வேன் டிரைவர் -போக்சோவில் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வேன் டிரைவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த 15 வயது மாணவி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வேனில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் வேனில் சென்ற மாணவியை வேன் டிரைவர் பாலியல் சீன்டலில் ஈடுப்பட்டதாக அந்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்தார்.புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் பாலியில் சீண்டலில் ஈடுப்பட்ட வேன் டிரைவர் நயினார் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ், 25; , என்பவரை போக்சோ வழக்கில்கைது செய்தனர்.