பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி; வானுார் அரவிந்தர் கல்லுாரி சாம்பியன்
புதுச்சேரி : அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் வானுார் அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.அண்ணாமலை பல்கலைக் கழக கல்லுாரிக்களுக்கான கிரிக்கெட் போட்டி, வானுார் அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.இதில் வானுார் அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலிடம், மயிலாடுதுறை ஏ.வி.சி., கலை கல்லுாரி இரண்டாமிடம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மூன்றாமிடம், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரி நான்காமிடம் பெற்றன.பரிசளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளர்களாக மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பண்பில்நாதன், சிவராமன் ஆகியோர் பங்கேற்று, முதல் நான்கு இடங்கள் பிடித்த கல்லுாரிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். கல்லுாரி முதல்வர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகரன் நன்றி கூறினார்.