வாசவி இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
புதுச்சேரி: புதுச்சேரி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் 10ம் வகுப்பில் 87 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில் 51 மாணவர்களும் பங்கேற்றனர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் மாணவி ஜைனாப் 490 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் திலாக் 488, மாணவி தாமரை செனிவி 486 ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.இதில், 73 மாணவர்கள் சிறப்பு பிரிவிலும் (75 சதவீதத்திற்கு மேல்), 14 மாணவர்கள் முதல் வகுப்பிலும் (60 சதவீதத்திற்கு மேல்) தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் பள்ளி அளவில் மாணவர் ரவி ராகவ் 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் சோஹம்பால் 481, மாணவன் முகமது அர்ஷத் 480 ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். இதில், 45 மாணவர்கள் சிறப்பு பிரிவிலும், 6 மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் மாரிமுத்து, துணை முதல்வர் செந்தில்ராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், புதுச்சேரி ஆரிய வைசிய கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பள்ளியின் முதல்வர் நன்றி தெரிவித்தார்.