உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாதானுார் கோவில் திருப்பணி துவக்கம்

வாதானுார் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி, வாதானுார் கிராமத்தில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் மேல் தளம் அமைப்பதற்கான திருப்பணி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, வேணுகோபால சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை