இந்தி திணிப்பை எதிர்த்து வி.சி., பிரசாரம்
புதுச்சேரி: பிரெஞ்சு மொழியை நீக்கி விட்டு, இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து வி.சி., சார்பில், வாகன பிரசாரம் நடந்தது. கட்சியின் முதன்மை செயலாளர் அரிமாத்தமிழன் பிரசார வாகன பயணத்தை துவக்கி வைத்தார். பிரசாரம் அரும்பார்த்தபுரத்தில் துவங்கி மூலக்குளம், உழவர்கரை, ரெட்டியார்பாளையம் வழியாக சென்று பவழக்காரன்சாவடியில் நிறைவடைந்தது.