உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 மற்றும் 8ம் வகுப்பு கட்டாய தேர்ச்சியை ரத்து செய்துள்ள புதுச்சேரி அரசை கண்டித்து வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கல்வித்துறை வளாகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், முன்னவன், செல்வநந்தன், அரிமா தமிழன், ஆதவன், சுடர்வாளன், கார்முகில், எழில்மாறன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக ரவிக்குமார் எம்.பி., அமைப்பு செயலாளர் தலையாரி, தொண்டரணி முதன்மை செயலாளர் பொதினிவளவன், ஆதிமொழி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். 5வது மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை திணிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை