உள்ளூர் செய்திகள்

வி.சி., சாலை மறியல்

பாகூர்: அம்பேத்கரை அவமதித்து பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் வி.சி., கட்சியினர் கிருமாம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஏம்பலம் தொகுதி செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாண்டியன், மாசிலாமணி, மஞ்சுளா, டேவிட், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் தமிழ் வளவன், பாக்கியலட்சுமி, தமிழ்வாணன், முருகமதி உள்ளிட்ட 50 பேர் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, கோஷம் எழுப்பினர். கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை