உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வரின் பெயரை கூறி சாராய வியாபாரி மிரட்டல் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

முதல்வரின் பெயரை கூறி சாராய வியாபாரி மிரட்டல் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

காரைக்கால்: காரைக்காலில் சாராய வியாபாரி, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பெயரைக்கூறி போலீசாரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.காரைக்கால் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகளின் நடமாட்டங்களை கண்காணிக்கும் வகையில் போலீஸ் சார்பில், 'ஆபரேஷன் திரிசூலம்' துவங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி பகுதியில் எஸ்.பி., பாலச்சந்தர் தலைமையில் சாராய வியாபாரி 'பாம்'ராஜாவைபோலீசார்விசாரணைக்கு அழைக்க சென்றனர். அப்போது அவர் முதல்வர் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பெயரை கூறி, போலீசாரை மிரட்டி உள்ளார்.மேலும் அவர், அந்த தொகுதி எம்.எல்.ஏ., அழைத்தால் தான் வருவேன் என்றும் கூறி உள்ளார்.இந்த நிலையில் போலீசார் 'பாம்'ராஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை