விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் புதுச்சேரி அணி அபார வெற்றி
புதுச்சேரி : விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அருணாச்சலபிரதேசம் அணியை, புதுச்சேரி அணி விழ்த்தியது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஆடவர் ஒரு நாள் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அகமதாபாத் நகரில் நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், அருணாச்சல பிரதேஷ் அணியும் மோதின.முதலில் ஆடிய புதுச்சேரி அணி அதிரடியாக ஆடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 372 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் நேயன் காங்கேயன் 106 ரன், ஜஸ்வந்த் ஸ்ரீராம் 76 ரன், சித்தாக் சிங் 46 ரன் அடித்தனர்.அடுத்து, ஆடிய அருணாச்சல பிரதேஷ் அணி 47.4 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரியின் அமன் கான் 6 விக்கெட் எடுத்தார். புதுச்சேரி அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புதுச்சேரி அணியின் நேயன் காங்கேயன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.