உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா

புதுச்சேரி : விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, புதுச்சேரி விநாயகா மிஷன் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் அறிவுறுத்தலின்பேரில் நடந்த விழாவிற்கு, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்று, கடந்த ஆண்டு சாதனைகள் விளக்கி கூறினார். கடலுார் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் மணிமேகலை கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். பல்கலைக் கழகத்தின் மாணவர் நல இயக்குநர் சண்முக சுந்தரம் மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பு இயக்குநர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், 210 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் 3 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். ஒருங்கினைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை