வாக்காளர் திருத்த பணி ஓம்சக்தி சேகர் பிரசாரம்
புதுச்சேரி: சிறப்பு வாக்காளர் திருத்த பணி குறித்து அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் , பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. புதுச்சேரி இந்திரா சதுக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில், மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, சிறப்பு வாக்காளர் பதிவு நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கினார். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, விடுபட்டவர்களின் பெயர் சேர்த்தல், இடமாற்றம் போன்ற விவரங்களை இந்த சிறப்பு திருத்த பணியில் செய்து கொள்ள பொதுமக்கள் முன் வர வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் குப்புசாமி, செல்வராஜ், அப்பாவு, வெங்கடேசன், சுந்தரமூர்த்தி, மகளிரணி கலா, இந்திரா , கன்னியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.