சிங்கிரிகுடி கோவிலுக்கு 5ம் தேதி பாதயாத்திரை
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலுக்கு பாத யாத்திரையில், 50 பஜனை குழுவினர் பங்கேற்கின்றனர்.உலக நன்மைக்காக ஆண்டுதோறும், ஜனவரி மாத ஞாயிற்றுக்கிழமையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பஜனை குழுக்கள் மற்றும் பக்தர்கள், சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலுக்கு பாத யாத்திரை செல்கின்றனர். அதன்படி, 28ம் ஆண்டுபாத யாத்திரை வரும், 5ம் தேதி நடக்கிறது. அன்று,அதிகாலைகாந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நாம சங்கீர்த்தனத்துடன் யாத்திரை துவங்குகிறது. யாத்திரைபுதுச்சேரி - கடலுார் சாலை வழியாக, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலைஅடையும்.இதையொட்டி வரும், 4ம் தேதி வைசியாள் வீதியில் ஆன்மிக சொற்பொழிவு மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இந்த யாத்திரையில்பெரியாழ்வார் திருத்தொண்டு சபை, வணிக வைசிய ஸ்ரீ ஹரிஹர பஜனை குழு, பாண்டுரங்க ரகுமாயி ஆன்மிக கைங்கர்யா சபா, வேங்கடாத்திரி பஜனைக்கூடம், பாண்டவ துாதன் சங்கீர்த்தன சபா உள்ளிட்ட பல்வேறுபஜனை குழுவினர் கலந்து கொள்கின்றனர்.