காமராஜர் நகரில் மதியம் குடிநீர் கட்
புதுச்சேரி: புதிய குடிநீர் இணைப்பு பணி காரணமாக, காமராஜர் நகர் பகுதிகளில் மதியம் வேளையில் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு: கோரிமேடு குடிநீர் பிரிவுக்குட்பட்ட காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசன் நகர் பகுதிகளில் பழைய குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை 8ம் தேதி முதல், மதியம் வேளையில் குடிநீர் வினியோகம் தற்கா லிகமாக நிறுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில், கோரிமேடு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட இருப்பதால், இதுவரை புதிய குடிநீர் இணைப்பை ஏற்படுத்தி கொள்ளாதவர்கள், தக்க ஆவணங்களை சமர்ப்பித்து, உடனடியாக புதிய குடிநீர் இணைப்பை ஏற்படுத்தி கொள்ளவும். புதிய குடிநீர் இணைப்புகளில் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய இருப்பதால், பழைய குடிநீர் இணைப்புகளில் குடிநீர் நிறுத்தப்பட உள்ளது. மேலும், காலி மனைகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.