உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறையூர், கோபாலன்கடையில் இன்றும், நாளையும் குடிநீர் கட்

பொறையூர், கோபாலன்கடையில் இன்றும், நாளையும் குடிநீர் கட்

புதுச்சேரி: பொறையூர், கோபாலன்கடை பகுதிகளில் இன்றும், நாளையம் குடிநீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளரின் செய்திக்குறிப்பு: வில்லியனுார் குடிநீர் பிரிவு சார்பில் பொறையூர் மற்றும் கோபாலன்கடை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பாராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால், பொறையார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 17ம் தேதியும், கோபாலன்கடை சுற்று வட்டாரங்களிலும் நாளை 18ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் தடைப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !