உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோரிமேடு குரு நகரில் 20ம் தேதி குடிநீர் கட்

 கோரிமேடு குரு நகரில் 20ம் தேதி குடிநீர் கட்

புதுச்சேரி: கோரிமேடு - பூத்துறை சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (20ம் தேதி) குரு நகர் பகுதியில் குடிநீர் நிறுத்தப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், புஷ்பா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !