உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

புதுச்சேரி : பெரியார் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, பெரியார் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (16 ம் தேதி), நாளை மறுநாள் (17 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், பெரியார் நகர், கோல்டன் அவென்யு, சாரதாம்பாள் நகர், மணக்குள விநாயகர் நகர், எஸ்.பி.ஐ., காலணி, ரத்னா நகர், அம்பாள் நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மருதம் நகர், ஆருத்ராநகர், முகாம்பிகை நகர், அஜீஸ்நகர், பவழநகர், எல்லைபிள்ளைச்சாவடி, திலகர் நகர், விவேகானந்தாநகர், வழுதாவூர் சாலை, கணபதி நகர், சித்தானந்தா நகர், மோகன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை