நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
புதுச்சேரி: கொட்டுப்பாளையம், இ.சி.ஆரில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலில் 14ம் ஆண்டு வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, நாகாத்தம்மன் மற்றும் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை கோவில் மகா மண்டபத் தில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சாமிநாதன், பொருளாளர் உதயகுமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.