உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எடை அளவைத்துறை சிறப்பு முகாம்

எடை அளவைத்துறை சிறப்பு முகாம்

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் நடந்த எடை அளவை இயந்திரங்களை முத்திரையிடுவதற்கான சிறப்பு முகாமில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.தட்டாஞ்சாவடியில் சட்டமுறை எடை அளவைத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு எடைக்கற்கள் மற்றும் அளவைகள் சரி பார்க்கப்பட்டு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.புதிதாக எடை அளவை மற்றும் எடையளவு இயந்திரங்களை வாங்கும் போது, அதில் அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டுள்ளதா என, வணிகர்கள் கவனித்து வாங்க வேண்டும்.மின்னணு தராசு வாங்கும் போதும், அந்த இயந்திரத்தின் தன்மைகளை குறிப்பிடும் அடையாள தகடு மற்றும் அரசாங்க முத்திரை பதித்ததற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தராசுகள் எடையளவைத்துறை ஆய்வாளர்களால் பறிமுதல் செய்யப்படும். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள முக்கிய வியாபார மையங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து, சட்டமுறை எடை அளவைத்துறை ஆய்வாளர்கள் எடை அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்களை முத்திரையிட திட்டமிட்டனர்.இதற்கான சிறப்பு முகாம், லாஸ்பேட்டை, உழவர்சந்தையில் நேற்று காலை 10:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்தது. எடை அளவைத்துறை அதிகாரி சம்பத் தலைமையில் நடந்த முகாமில் அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள், எடை அளவைகள் மற்றும் இயந்திரங்களில் முத்திரையிட்டு கொண்டனர். முகாம் நாளை சின்னக்கடை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் நடக்கிறது. மேலும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும், வரும், 29ம் தேதி, முகாம்கள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை