மேலும் செய்திகள்
கல்லுாரிகளுக்கிடையே கபடி போட்டி துவக்கம்
19-Oct-2024
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், கல்லுாரிகளுக்கு இடையேயான பளு துாக்கும் போட்டி நடந்தது.தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலை கல்லுாரி, உடற்கல்வி துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி துறை இணைந்து, மாநில கல்லுாரிகளுக்கு இடையேயான பளு துாக்கும் போட்டி ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், கல்லுாரி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மோனிஷா, போட்டியை துவக்கி வைத்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஆதவன் முன்னிலை வகித்தார். போட்டியில், ஆச்சாரியா பொறியியல் மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லுாரிகள் சுழற் கேடயங்களை பெற்றனர்.
19-Oct-2024